உள்ளத்து ஓசை

Monday, May 15, 2006

செல்பேசியில் தமிழ் நூல்கள் - ஒரு முன்னோட்டம் - பாகம் 1

(Tamil Mobooks - A preview)
சென்ற தமிழ் வருடப்பிறப்பன்று வெளியிடப்பட்ட முதல் மின்நூல் Flash Lite தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப் பட்டிருந்தது. கணினிகளைப் போலல்லாது செல்பேசிகளில் Flash தொழில்நுட்பம் இன்னும் பரவலாக்கப்படாத நிலையில் இந்த புத்தகம் பலருக்கும் எட்டாக் கனியானது.

எனவே ஏற்கனவே பரவலாக பயன்பாட்டில் உள்ள மெபைல் ஜாவா தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் புத்தகங்களை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறேன். அந்த தொழில் நுட்பத்தின் முன்னோட்டத்தை கீழ்க்கண்ட படத்தில் காணவும்.

Monday, April 24, 2006

ஆறுமாதக் குழந்தையின் அழுகுரல்

ஒர் உண்மைச் சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பின் பிரதிபலிப்பு. அதிகாலையில் அந்த இந்தோனேசிய பெண்மணி கண்ணீரும் கலவரமுமாய் காவல் நிலையத்தில் நுழைந்தாள். அவளுடைய ஆறுமாத இந்தியக் குழந்தை அஞ்சலியைக் காணவில்லை. முந்திய தினம்தான் தன் கணவன் ஜலீலைப் பார்க்க மகளுடன் சிங்கை வந்திருந்தாள். வழக்கம் போலவே கணவனின் நண்பரான சூசைநாதனின் இல்லத்தில்தான் தங்கினாள். காலையில் எழுந்து பார்த்தால் குழந்தையை காணவில்லை. காவல்துறை விசாரணை தொடங்கிற்று.தாயின் கூற்றுப்படி முந்திய தினம் இரவு நடந்ததானது,

"குழந்தையை பக்கத்தில் படுக்க வைத்திருந்தேன், நள்ளிரவில் ஏதோ அரவம் கேட்டதால்
விழிகளை மெல்லத் திறந்தேன். முகத்துக்கு மிக அருகில் சூசைநாதன் குனிந்திருந்தார்.
எனக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. உறக்கத்தை தொடர்பவள் போல கிடந்தேன். அவர்
அஞ்சலியை எடுத்துக் கொண்டு தன் படுக்கையறையில் நுழைந்துவிட்டார். மீண்டும் சற்று
நேரத்தில் திரும்பிவந்து குழந்தையை பக்கத்தில் கிடத்திவிடுவார் என்று காத்திருந்து
அப்படியே சோபாவில் உறங்கிவிட்டேன். காலை ஆறு மணியளவில் விழித்துப் பார்க்கும்போது
குழந்தை அருகில் இல்லை. சூசைநாதனின் அறைக்கதவை அறைந்து தட்டினேன். வழியை
மறைத்துக்கொண்டு வெளியே வந்த அவர் குழந்தை தன்னுடன் இல்லை என்றும் யாரோ தூக்கிச்
சென்று விட்டதாக சொன்னார். அறைக்குள் தென்பட்ட இரத்தக் கறை பதட்டத்தை
அதிகப்படுத்தியது. உடனே உங்களிடம் வந்துவிட்டேன்"

காவலர்கள் உள் நுழைந்து பார்த்த போது அவள் குறிப்பிட்ட இரத்தக் கறை இல்லை, படுக்கை விரிப்பு நீக்கப்பட்டிருந்தது. தலையணைகளில் ஒன்று துணிகளுடன் அலமாரியில் கிடந்தது. குழந்தை வீட்டினுள் எங்கும் இல்லை. பின்னர் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் அடியில் ஒரு குப்பைத்தொட்டியில் கைகளும் கால்களும் பின்புறம் வளைத்துக் கட்டப்பட்ட நிலையில் குழந்தையின் பிணம் கிடைத்தது.

சூசைநாதன் மீது கொலை வழக்கு போடப்பட்டது. நீதிமன்றத்தில் அவர் கூறியதாவது,

"அன்று ஜலீலுக்கும் அவளுக்கும் தொலைபேசியில் பலமான வாக்குவாதம், உடனே இங்கே
வாருங்கள், உங்கள் பணக் கஷ்டத்தைப் பற்றி எனக்கு அக்கறையில்லை என்று இரைந்தாள்.
ஆனால் ஜலீல் செவிசாய்க்கவில்லை, இதன் காரணமாக மிகுந்த வெறுப்புற்றிருந்த அவளிடம்
குழந்தையை விட வேண்டாம் என்று நினைத்து அவளிடம் சொல்லிவிட்டு குழந்தையை என்னுடன்
இருத்திக் கொண்டேன். ஆனால் நள்ளிரவில் என்னுடைய அறைக்குள் அவள் நுழைந்து குழந்தையை
எடுத்துக்கொண்டாள். அவளுடன் புதிதாக இன்னொரு ஆடவனும் இருந்தான். அவனுடைய முகம்
எனக்கு தெளிவாக தெரியவில்லை. இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். சற்று
நேரத்தில் அவள் மட்டும் உள்ளே நுழைந்தது தெரிந்தது. என் அறைக்குள் மீண்டும்
நுழைந்தவள் தலையணையை ஒளிப்பது, இன்னும் சில மாற்றங்களை ஏன் செய்தாள் என்பது எனக்கு
புரியவில்லை. காலையில் அவள் குழந்தையைக் காணோம் என்றதும் நான் தான் போலீசிடம்
போவோம் என்றேன். பின்னர் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடந்து கொண்டிருந்த போது
போலீசிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது உடனே வீடு திரும்பு என்று அதனால்
திரும்பிவிட்டேன்"


கணவனிடம் தொலைபேசி வழி நடந்த சண்டையையும், போலி பாஸ்போர்ட் உபயோகித்து சிங்கையில் நுழைந்திருந்ததையும், காவலரை அணுகும் முன் அதை அவசரமாய் அழித்ததையும் அவள் ஒப்புக்கொண்டாள். ஆனால் மற்றவற்றை மறுத்தாள்.

குழந்தையின் உடல் சோதிக்கப்பட்டதில் கிடைத்த தகவல்கள், குழந்தையின் பெண்ணுறுப்பு கிழிபட்டிருந்தது,உள்ளே சதை வழண்டிருந்தது. இவையும் கட்டப்பட்டிருந்த விதமும் பாலியல் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று காட்டுகிறது. மரணத்துக்கு காரணம் தலையில் பட்ட பலமான அடி. அதாவது குழந்தை பலமான பாலியல் தாக்குதலுக்குப் பின்னும் உயிர் தரித்திருந்திருக்கிறது, வீட்டினுள்ளிருந்தபடியே குப்பையை வீச பயன்படும் அமைப்பின் வழியே திணிக்கப்பட்டு ஒன்பது மாடி உயரத்தில் இருந்து விழுந்தபோது பட்ட அடிகளில்தான் உயிரை விட்டிருக்கிறது.

வழக்கின் இறுதியில் சூசைநாதனுக்கு தூக்குதண்டனை வழங்கப் பட்டது. காவலரிடம் கொடுத்த வாக்குமூலம், வழக்கில் சொன்ன சாட்சியம் இரண்டும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததும். தடய ஆய்வாளர்கள் படுக்கை அறைச்சுவர், இரண்டு தலையணைகள், அவன் கை விரல் நகம் ஆகியவற்றில் கண்டெடுத்தது குழந்தையில் இரத்தம் என்பது மெய்பிக்கப் பட்டதும். இந்தோனேசிய பெண்மணியின் சாட்சியமும் காரணங்கள்.

சம்பவம் நடந்தது ஆகஸ்டு ஐந்து இரண்டாயிரத்து இரண்டில் நான் குடியிருக்கும் இதே ஹவ்காங்கில், ஆனால் அதைப்பற்றி இன்று சேனல் ஐந்தில் ஒளிபரப்பான True Files நிகழ்ச்சியில் கண்டபோது அதிலும் குறிப்பாக கைகளும் கால்களும் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் குழந்தையிநன் பிணத்தை காட்டியபோது, அந்தக் குழந்தையின் ஓலம் காதுகளில் அறைந்து ஒலித்தது, ஒலிக்கிறது.

"முடியலீங்க! மனசு ரொம்ப வலிக்குதுங்க, அந்த சின்னக் குழந்தையை எப்படிங்க
இப்படியெலாம் செய்ய எப்படி மனசு வந்தது, ஒரு வேளை நமக்கும் சின்னக் குழந்தை
இருக்கறதால வலி அதிகமா இருக்கோ!", புலம்பிய மனைவியை சமாதானம் செய்ய முடியவில்லை.


"தகப்பனே ஐந்து பெண்களையும் பலகாலமா கற்பழிச்ச சேதியெல்லாம் சொன்னாங்களே! அப்பக்கூட
இவ்வளவு கஷ்டமா இல்லையே. எப்படி அப்படி நடக்கலாம், அவனுக்கு அரிப்பெடுத்தா
அதுக்குன்னு எங்கெயாச்சும் போகவேண்டியதுதானே? ஆம்பளைங்களுக்கு இப்படியெல்லாம்
தோணுமா!", ஆண்களைப் பொதுப்படுத்தியதால் விளக்க வேண்டியது என் கடமையானது.


"அந்த மாதிரி இடங்களுக்கு அவன் போகிறவனாகவே கூட இருக்கலாம், இல்லை அவனுடைய
பொருளாதாரம் இடம் கொடுக்காமலிருக்கலாம். அந்த நேரத்தில் அவனுக்கு அந்த விபரீத யோசனை
தோன்றியிருக்கிறது, அப்போதைக்கு அவசரமாக தேவைப்பட்டிருக்கிறது. அம்மா நண்பனின்
மனைவி, மனது இடம் கொடுக்காமல் போயிருக்கலாம், அல்லது எதிர்காலம் சிக்கலாகலாம் என்று
தோன்றியிருக்கலாம். குழந்தை சிக்கலில்லாதது, தனக்கு என்ன நடக்கிறது என்பதை
புரிந்துகொள்ள முடியாது, யாரிடமும் போய் சொல்லாது என்று நினைத்திருப்பான். அதன்
வலியையும் அதன் உயிருக்கே ஆபத்தாகலாம் என்பதையும் துளியாவது யோசித்திருந்தால்
இரண்டு உயிர்பலி தவிர்க்கப் பட்டிருக்கும்"

"அவனை விடுங்க அவன் பண்ணுன தப்புக்கு அனுபவிக்கிறான், அந்த குழந்தை என்ன பாவம்
பண்ணுச்சு! மலர்ந்து சிரிக்கவேண்டிய வயசுல அதுக்கு ஏன் இந்தக் கொடுமையெல்லாம்?"

"இந்தக் கேள்விக்கு எங்கிட்ட பதில் இல்லைம்மா! எனக்கும் இது கேள்வி மட்டுந்தான்.
இதையெல்லாம் நாம கேள்விப்படறதும் சிந்திக்கிறதும் இப்படிப்பட்ட கொடுமைங்களில்
சிக்கிக்காம எச்சரிக்கையா இருக்கத் தான்
, ஹார்மோன் தொந்திரவால கண்டதையும் யோசிச்சு
செயல் படுத்தறதுக்கு முன்னால அவனவனை யோசிக்க வைக்கத்தான். உனக்கு ஒரு எச்சரிக்கை
உணர்வு வந்திருக்கில்லையா, அது போதும். இதை விட்டு வேற பக்கம் மனசைத் திருப்பு",
ஒரு வழியாக படிப்படியாக மனைவியை உறங்க வைத்துவிட்டேன், எனக்குள் இன்னும் அலை
அலையால் அதே விஷயம் முட்டி மோதி அலைக் கழிக்கிறது. என்னால் ஏதும் செய்ய இயலுமா!
நான் என்ன செய்ய வேண்டும்?

இதோ தொனின ஒரே ஒரு விஷயத்தை செயல்படுத்தியாச்சு, உங்களுக்கு ஏதும் தோணுதுங்களா?

Saturday, April 15, 2006

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

செல்பேசிகளிலே(cellphone / handphone) பரவலா பயன்பாட்டுல இருக்கிறது மொபைல் ஜாவா. பல விளையாட்டுக்கள், உபயோகமுள்ள சின்னச் சின்ன செயலிகள், அவ்வளவு ஏன்? தற்போது உபயோகத்துல இருக்கிற இரண்டு தமிழ் குறுச்செய்தி செயலிகள் எல்லாம் இதுல தான் வடிவமைக்கப்பட்டு இருக்கு.

உங்க செல்பேசியிலே J2ME (Java 2 Mobile Edition) இருக்கா? MIDP ஒண்ணா இரண்டா?

புரியாதவங்களுக்காக இன்னும் கொஞ்சம் விளக்கம்

ஜாவாவை செல்பேசி மற்றும் கையடக்க கணினிக்காக மாத்தி எழுதும் போது அவங்களுக்கு இருந்த பெரிய பிரச்சனை கணினி மாதிரி ஒரு தரப்படுத்தல், வரைமுறை அதுகள்ல இல்லாதது தான். ஜாவாவோட வெற்றிக்கு காரணமான அதன் தாரக மந்திரமான ஒரு முறை எழுதிடு எல்லா தளங்களிலும் தடையின்றி இயக்கிடு இங்க தட்டுத்தடுமாறிடக்கூடாதேன்னு MIDP (Mobile Information Device Profile) மற்றும் CLDC (Connected Limited Device Configuration) அப்படின்னு இரண்டு வரையறை கொண்டுவந்தாங்க.

ஒரு செல்பேசியுடைய ஜாவா செயல்பாடுகள் எதுவரைக்கும் போகலாம் அப்படீங்கிறதை அந்த செல்பேசியுடைய MIDP எண்ணும CLDC எண்ணும் சேர்ந்து தீர்மானிக்கும். இப்படிப்பட்ட வரையறைதான் ஜாவாவுக்கு மொபைல் தொழில் நுட்பத்திலும் வெற்றியை கொடுத்தது

இதுல CLDC பத்தி அப்புறம் பார்ப்போம்

முதல்ல உங்க செல்பேசியில ஜாவா இருக்கா? MIDP ஒண்ணா இரண்டான்னு பார்த்துடுவோம்

கீழே இருக்கிற பட்டியலில் உங்க செல்பேசி இருந்தா உங்க செல்பேசியில ஜாவா இருக்கு. அப்படியே MIDP 1 இல்லை MIDP 2 எதுல உங்க செல்பேசி பட்டியலிடப்பட்டிருக்கு அப்படின்னும் பாத்து வைச்சுக்கோங்க

இதுக்கெல்லாம் என்ன அவசரம், என்ன அவசியம்னு கேக்கறீங்களா? சீக்கிரமே சொல்றேன் :)

MIDP 1 MIDP 2
VendorDevice
BenQP30
BlackBerry5810
CasioC452CA
GenericPlainMidp1
Genericmidp1
HitachiC3001H
KyoceraC3002K
LGC-nain 2000
LGLX5350
MitsubishiJ-D05
MotorolaA388
MotorolaA830
MotorolaA920
MotorolaA925
MotorolaC370
MotorolaC450
MotorolaC550
MotorolaE380
MotorolaT280i
MotorolaT720(CDMA)
MotorolaT720(GSM)
MotorolaT720i
Motorolai50sx
Motorolai55sr
Motorolai80s
Motorolai85s
Motorolai88s
Motorolai90c
Motorolai95cl
Nokia3100
Nokia3108
Nokia3120
Nokia3200
Nokia3300
Nokia3410
Nokia3510i
Nokia3520
Nokia3530
Nokia3560
Nokia3587
Nokia3590
Nokia3595
Nokia3600
Nokia3620
Nokia3650
Nokia3660
Nokia5100
Nokia6010
Nokia6100
Nokia6108
Nokia6200
Nokia6220
Nokia6310i
Nokia6560
Nokia6610
Nokia6610i
Nokia6650
Nokia6651
Nokia6800
Nokia6810
Nokia6820
Nokia7200
Nokia7210
Nokia7250
Nokia7250i
Nokia7600
Nokia7650
Nokia8910i
NokiaN-Gage
NokiaN-Gage_QD
NokiaSeries40
NokiaSeries40DP1
NokiaSeries60
NokiaSeries60E1
PanasonicC3003P
PanasonicX60
Research In MotionBlackBerry 5810
Research In MotionBlackBerry 5820
SamsungC100
SamsungC110
SamsungD100
SamsungD108
SamsungE100A
SamsungE108
SamsungE400
SamsungE418
SamsungE700A
SamsungE708
SamsungE800C
SamsungE808
SamsungS100
SamsungS105
SamsungS200
SamsungS208
SamsungS300
SamsungS300M
SamsungS307
SamsungSCH-X130
SamsungSCH-X230
SamsungSCH-X250
SamsungSCH-X350
SamsungSGH-E100
SamsungSGH-E330
SamsungSGH-E630
SamsungSGH-E700
SamsungSGH-E800
SamsungSGH-E820
SamsungSGH-S100
SamsungSGH-X100
SamsungSGH-X600
SamsungSPH-N400
SamsungSPH-X4209
SamsungX100A
SamsungX108
SamsungX400
SamsungX426
SamsungX427
SamsungX600A
SamsungX608
SanyoA3011SA
SanyoSCP-4900
SanyoSCP-5300
SendoX
SharpGX10
SharpGX10i
SharpGX20
SharpGX30
SharpGX30i
SharpJ-SH07
SharpJ-SH08
SharpTM100
Siemens2128
Siemens3138
SiemensA56i
SiemensC55
SiemensC56
SiemensC60
SiemensC61
SiemensCF62
SiemensCT56
SiemensM46
SiemensM50
SiemensM55
SiemensM56
SiemensMC60
SiemensMT50
SiemensS55
SiemensS56
SiemensS57
SiemensSL55
SiemensSL56
SiemensSX1
Siemensmidp1
Siemensx55
Sony-EricssonJavaPlatform1
Sony-EricssonJavaPlatform1Symbian
Sony-EricssonP800
Sony-EricssonP802
Sony-EricssonT610
Sony-EricssonT616
Sony-EricssonT618
Sony-EricssonT628
Sony-EricssonT630
Sony-EricssonT637
Sony-EricssonZ600
Sony-EricssonZ608
ToshibaA3013T
ToshibaC5001T
ToshibaJ-T06
VodafoneSharp-GX10
VodafoneSharp-GX10i
VodafoneSharp-GX20
VendorDevice
AlcatelOne Touch 735i
AlcatelOne Touch 756
BlackBerry7100t
BlackBerry7290
BlackBerry7520
GenericDefaultColorPhone
GenericDefaultGrayPhone
GenericMediaControlSkin
GenericMidp2Cldc11
GenericPlainMidp2
GenericPlainMidp2Cldc11
GenericQwertyDevice
Genericjsr185
Genericjtwi
Genericmidp2
Genericmulti
Genericwmapi20
HTCHimalaya
LGU8138
Mio8390
MotorolaA1000
MotorolaA630
MotorolaA760
MotorolaA780
MotorolaA845
MotorolaC380
MotorolaC650
MotorolaE1000
MotorolaE398
MotorolaE398Emulator
MotorolaE680
MotorolaFOMA_M1000
MotorolaMPx200
MotorolaSLVR
MotorolaT725
MotorolaV1050
MotorolaV180
MotorolaV220
MotorolaV3
MotorolaV300
MotorolaV303
MotorolaV360
MotorolaV400
MotorolaV500
MotorolaV525
MotorolaV550
MotorolaV551
MotorolaV600
MotorolaV620
MotorolaV635
MotorolaV8
MotorolaV80
MotorolaV980
Motorolai730
NECE616
Nokia3152
Nokia3155
Nokia3155i
Nokia3220
Nokia3230
Nokia5140
Nokia5140i
Nokia6020
Nokia6021
Nokia6030
Nokia6060
Nokia6101
Nokia6102
Nokia6152
Nokia6155
Nokia6155i
Nokia6170
Nokia6230
Nokia6230i
Nokia6235
Nokia6235i
Nokia6255
Nokia6260
Nokia6265
Nokia6265i
Nokia6270
Nokia6280
Nokia6600
Nokia6611
Nokia6620
Nokia6630
Nokia6670
Nokia6680
Nokia6681
Nokia6682DP2
Nokia6822
Nokia7260
Nokia7270
Nokia7610
Nokia7700
Nokia7710
Nokia8800
Nokia8801
Nokia9300
Nokia9500
NokiaE70
NokiaN70
NokiaN90
NokiaN91
NokiaSeries40DP2
NokiaSeries40DP3
NokiaSeries40Midp2
NokiaSeries60E2
NokiaSeries60E2FP1
NokiaSeries60E2FP2
NokiaSeries60E2FP3
NokiaSeries60Midp2
NokiaSeries80
NokiaSeries90
O2XDAII
PalmTungstenC
QtekXDAII
SagemMyV-65
SagemMyV-75
SagemMyX5-2
SagemMyX6
SagemMyX7
SagemMyX8
SamsungD410
SamsungD415
SamsungD418
SamsungE105
SamsungE300
SamsungE310
SamsungE600
SamsungE710
SamsungE715
SamsungE810
SamsungP400
SamsungP730
SamsungP735
SamsungSGH-A700
SamsungSGH-D500
SamsungSGH-D720
SamsungSGH-D730
SamsungSGH-E600
SamsungX105
SamsungX430
SamsungX450
SamsungX458
SamsungZ100
SamsungZ105
Sharp902
SharpGX15
SharpSGH-902
SharpTM200
SiemensC65
SiemensCX65
SiemensM65
SiemensS65
SiemensSK65
SiemensST60
Siemensmidp2
Siemensx65
Siemensx75
Sony-EricssonD750
Sony-EricssonF500
Sony-EricssonF500i
Sony-EricssonJ300
Sony-EricssonJavaPlatform2
Sony-EricssonJavaPlatform2Symbian
Sony-EricssonJavaPlatform3
Sony-EricssonJavaPlatform4
Sony-EricssonJavaPlatform5
Sony-EricssonJavaPlatform6
Sony-EricssonK300
Sony-EricssonK500
Sony-EricssonK500c
Sony-EricssonK500i
Sony-EricssonK600
Sony-EricssonK608
Sony-EricssonK700
Sony-EricssonK700c
Sony-EricssonK700i
Sony-EricssonK750
Sony-EricssonP900
Sony-EricssonP908
Sony-EricssonP910
Sony-EricssonP910a
Sony-EricssonP910c
Sony-EricssonP910i
Sony-EricssonS700
Sony-EricssonS700c
Sony-EricssonS700i
Sony-EricssonV600
Sony-EricssonV800
Sony-EricssonV802
Sony-EricssonW550
Sony-EricssonW600
Sony-EricssonW800
Sony-EricssonZ1010
Sony-EricssonZ500
Sony-EricssonZ500a
Sony-EricssonZ500i
Sony-EricssonZ520
Sony-EricssonZ800
T-MobileMDAII
T-MobileMDAcompact
T-MobileSDA
VodafoneMotorola-V525
VodafoneMotorola-V600
VodafoneSony-Ericsson-F500i
VodafoneSony-Ericsson-V600

Friday, April 14, 2006

உள்ளத்தின் அடங்கிய ஓசை

கடந்த ஒரு வருட காலமாக என் உள்ளத்தின் ஒலியற்ற ஓசையை கேட்டிருப்பீர்கள். சிரங்கு அல்லது பேனா பிடித்தவன் கையைப் பற்றி உணர்ந்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இத்தனைநாள் மௌனத்திற்கும், இப்போதைய தொடக்கத்திற்கும் ஒரு வலுவான காரணம் இருக்கிறது. அதை இன்றே உங்களிடம் பகிர்ந்துகொள்ள செய்த முயற்சி பலிக்கவில்லை. ஆனால் அநேகமாக நாளை ஈடேறும் என்று தோன்றுகிறது. அந்த காரணம் என்ன என்று உங்கள் ஊகத்தை பின்னூட்டமிடுங்கள். ஒரே ஒரு தடயக் குறிப்பு தருகிறேன். என்னுடைய கடைசிப்பதிவுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறது :)

Thursday, April 14, 2005

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

வலைப்பதிவாளர்களும் வாசகர்களுமாகிய உங்களை வருக வருக என வரவேற்கிறேன். தங்கள் முன்னிலையில், ஒலிப்பெருக்கி முழக்கமோ மேடையோ அலங்காரமோ இன்றி மெல்ல ஒரு வெளியீட்டு விழா.

என்ன வெளியிடப்போகிறோம்?

தற்போது வெளிவரும் புதிய கைப்பேசிகள் கைக்கணினியின் பெரும்பாலான அம்சங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. அவைகளின் வசதிகளைக் கொண்டு தமிழில் குறுந்தகவல் அனுப்பும் செயலி சமீபத்தில் சிங்கையில் வெளியீடு கண்டதை அறிந்திருப்பீர்கள்.

குறுந்தகவல்களையும் சிறுகவிதைகளையும் தாண்டி கதைகளையும் நாவல்களையும் கைப்பேசியிலேயே எடுத்துச்செல்லும் வண்ணம் வடிவமைத்தால் நமது பேருந்து மற்றும் இரயில் பயண நேரத்தை மேலும் பயனுள்ள வகையில் செலவழிக்கமுடியும் அல்லவா?

அதற்கான முதல் படியில் காலை எடுத்து வைத்திருக்கிறோம். எழுத்தின் காப்புரிமை பிரச்சனைகளை தவிர்க்கும் விதமாக (மற்றும் என் சுயநலம் காரணமாக) நான் எழுதிய மரத்தடி போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற பாதுகாவல் என்னும் சிறுகதையின் இரண்டாம் பதிப்பை கைப்பேசிக்கான இலவச மின்நூலாக தற்போது வெளியிடுகிறோம்.

என்னுடைய கைப்பேசியில் இந்த நூலை தரவிறக்கி படிக்க முடியுமா?

மேக்ரோ மீடியாவின் ஃபிளாஷ் லைட்டை ஏற்கக்கூடிய கீழ்க்காணும் கைப்பேசி மாதிரிகளில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தால் இயலும்
  • Nokia 3600, 3620, 3650, 3660, 6600, 6620, 6630, 6670, 7610, N-Gage, N-Gage QD
  • Siemens SX1
  • Sendo X
  • Sony Ericsson P800, P900, P910
முழுமையான பட்டியலுக்கு http://www.macromedia.com/mobile/supported_devices/
ஃபிளாஷ் லைட் பிளேயர் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்க வேண்டும் இல்லை எனில் அதை மேற்கண்ட மேக்ரோமீடியா தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் (தற்போதைக்கு இதற்கு USD 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் விரைவில் இது கைப்பேசியில் பொதிக்கப்பட்டே கிடைக்கும்)

மின்நூலை நிறுவுவது எப்படி?

53 Kb அளவுள்ள இந்த கோப்பை (Right Click -> Save Target) உங்கள் கணினியில் இறக்கி பின் உங்கள் கைப்பேசிக்கு மாற்றியோ அல்லது நேரடியாக கைப்பேசியில் இறக்கியோ ஃபிளாஷ் லைட் பிளேயர் கொண்டு இயக்கிக்கொள்ளவும். பக்கங்களை திருப்ப அம்புக்குறிகளை பயன்படுத்திக்கொள்ளவும்

மேற்கூறப்பட்ட எந்த வசதியும் இல்லாதவர்கள் இந்நூலைக் காண ஏதும் வழியுண்டா?

உண்டு! இதற்கெனவே கணினியில் இயங்கக்கூடிய பிரத்யேக மொபைல் சிமுலேட்டரை இந்தத் தளத்தில் (கீழே) நிறுவியுள்ளேன். அதன் பொத்தான்களை இயக்கி காணவும்



இனி...

இது குறித்த உங்கள் சந்தேகங்களையும் கேள்விகளையும் பின்னூட்டமாக இட்டால் நான் பதிலளிக்கிறேன்

இப்படிப்பட்ட தமிழ் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடும் என் போன்றவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் உங்களால் கொடுக்க முடிந்த ஊக்கமும், உற்சாகமும், இவை எல்லாம் பயன்பட்டன என்னும் திருப்தியும்தான்

கிடைக்கும்தானே?

அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தபடி, தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி கூறும்

அன்புடன்,
இர.அருள் குமரன்

Thursday, January 13, 2005

சுனாமி அரங்க உரையாடல்கள்-4

ஜனவரி 12, 2005 புதன் அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள்

இர.அருள்குமரன்(11:16:51am):
சந்திப்பதில் உள்ள சிக்கல்கள்
----------------------
அரங்கு இருபத்தி நான்கு மணி நேரமும் திறந்திருக்கும்.

ஒரு நிமிட இடைவெளிக்குள் அரங்குக்குள் கிட்டத்தட்ட நான்குபேர் நுழைந்து யாருமில்லை என்று
வெளியேறிவிடுவது அடிக்கடி நடக்கிறது. பலமுறை முயன்று பார்த்தேன் யாருமே இல்லை என்று பலரும்
அலுப்படைகிறார்கள்.

சிறிது நேரம் அரங்கினுள் காத்திருங்கள் என்று சொன்னால் அதிலும் சிக்கல், கணினியில் ஒன்றுக்கும் மேற்பட்ட
சாளரங்களை திறந்துவிடுவதால் மற்ற நபர்கள் வந்து அழைப்பதே நமக்கு தெரிவதில்லை. இப்படியும் சந்திப்புகள்
நிகழாமல் போகின்றன

யார் எப்போது வருவார்கள்? யாருக்கும் தெரிவதில்லை.

சில எளிய தீர்வுகள்
---------------
ஒவ்வொருமுறை உள்ளே வந்து வெளியேறும் போதும் நீங்கள் வந்த நேரத்தை (இந்திய நேரப்படி) மறக்காமல்
குறிப்பிடுங்கள். இன்ன நேரத்தில் நீங்கள் வருகிறீர்கள் என்பதை மற்றவர்கள் உணர்ந்து அந்த நேரத்திற்கு வர
முயற்சிக்க ஏதுவாக இருக்கும்

அடுத்து நீங்கள் வர இருக்கும் நேரத்தையும் (இந்திய நேரப்படி) குறிப்பிடவும்

இணைய தொடர்பில் சிக்கல் இல்லை என்றால் சற்று நேரமாவது அரங்கில் காத்திருந்து பார்க்கலாம்.
மற்றவர்களின் வருகை, வெளியேற்றங்களை அறிவிக்க ChatAlert ஐ
http://www.shockwave-india.com/tamil/tsunami/ தளத்திலிருந்து இறக்கி இயக்கிவிடவும்.
இது யாஹ¥ தூதுவன் போல ஒளி, ஒலி ஊடகங்கள் வழியாக நமக்கு அறிவிக்கும்.

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று சேவை செய்

இர.அருள்குமரன்(11:17:12am): பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று சேவை செய்யும் நண்பர்கள் தாங்கள் அரங்குக்கு வருகை தர இருக்கும்
நேரத்தை (இந்திய நேரப்படி) தங்கள் வலைப்பதிவிலும், மடற்குழுக்களிலும் அறிவியுங்கள். உங்களிடம் பேச
நிறைய வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் காத்திருக்கிறார்கள்

மற்றபடி ஒவ்வொரு நாளுக்கும் காலையும் மாலைவும் குறிப்பிட்ட நேரத்தை சந்திப்பு நேரமாக அறிவித்து
விடலாம், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வசதியாக இருக்கும்படி இந்த நேரத்தை ஒவ்வொரு நாளைக்கும்
மாற்றி அமைக்கலாம்.

இர.அருள்குமரன்(11:17:52am): சுனாமி அரங்க சந்திப்பு நேரப் பட்டியல்
-----------------------------

கீழ்கண்ட நேரப் பட்டியல் பலரையும் ஒரே நேரத்தில் திரட்டுவதற்காக மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மற்றபடி
அரங்கம் எல்லா நேரங்களிலும் திறந்தே இருக்கும். (எனக்கு தோன்றிய படி நேரத்தை குறித்திருக்கிறேன்,
மாற்றம் வேண்டுவோர் எனக்கு மடலிடவும். அல்லது பின்னூட்டம் கொடுக்கவும்)

(இந்திய நேரப்படி)
திங்கள் காலை 6:00 மதியம் 3:30
செவ்வாய் காலை 8:00 மாலை 5:30
புதன் காலை 10:00 மாலை 7:30
வியாழன் காலை 12:00 இரவு 9:30
வெள்ளி மதியம் 2:00 இரவு 11:30
சனி மாலை 4:00 அதிகாலை: 1:30
ஞாயிறு மாலை 6:00 அதிகாலை: 3:30



சீமாச்சு(12:03:26am): என்ன செய்யலாம் கார்த்திக்.. நம்ம ஹீரோ ரஜினிராம்கி என்ன சொல்றாரு?


கார்த்திக்ராமஸ்(12:03:40am): காலையில் ரோசா,நரைனிடம் பேசியதை உங்களுடன் கலந்து கொள்கிறேன்


வாசன்(12:03:42am): ர.ராம்கியிடம் கொஞ்ச நாட்கள் கழித்து ,நிலமை சீரடைந்தவுடன் சில விடயங்களை கேட்கலாமென்றுள்ளேன்.


கார்த்திக்ராமஸ்(12:03:55am): நல்லது


சீமாச்சு(12:03:58am): சொல்லுங்க ரெண்டு பேரும்..


சீமாச்சு(12:04:17am): ரோசா என்ன சொன்னார்?


கார்த்திக்ராமஸ்(12:04:28am): முதலில் , ரோசாவின் பெயரை வலைப்பதிவில் னீக்கவேண்டும் என்று கோரினேன்


கார்த்திக்ராமஸ்(12:04:59am): எனக்கு முன்னரே அவரும் அதை யோசித்துவிட்டு காசிக்கு இ மெயில் செய்வதாய் சொன்னார்


வாசன்(12:05:00am): கடலோர சிற்றூர்களிலிருந்து ஏழைச் சிறார்களை பொருள் உதவி செய்து -தத்தெடுப்பது


கார்த்திக்ராமஸ்(12:05:31am): ரோசாவின் பல விவாதங்களப்பார்த்து யாரும் தடங்கலாய் னினைக்கலாம் என்றேன்


வாசன்(12:05:39am): ?? ஏன் நீக்க வேண்டும்


கார்த்திக்ராமஸ்(12:05:44am): அவரும் ஏற்றுக்கொண்டார்; ஆவன செய்யப்பது


கார்த்திக்ராமஸ்(12:06:01am): இல்லை அது ஒரு கூட்டுபதிவு என்பதே சிறந்தது


வாசன்(12:06:04am): ஓ...


கார்த்திக்ராமஸ்(12:06:27am): ரஜினி, பத்ரி போன்றவர்களுக்கு எழுத அழைப்பு விடுப்ப்பதாய் ரோசா சொன்னார்


கார்த்திக்ராமஸ்(12:06:58am): முதலில் ஒரே இடத்தில் எழுதுவதில் நிறைட நன்மைகள் உள்ளது


கார்த்திக்ராமஸ்(12:07:26am): நான் னினைத்த் இன்னொன்று


கார்த்திக்ராமஸ்(12:07:53am): ராம்கி போல் , பல வேறு இடங்களிலிருந்து னிலவரத்தை சொல்ல ஆளில்லை


கார்த்திக்ராமஸ்(12:08:14am): முக்கியமாய் சொல்ல வேண்டும் என்று னினைத்த ஒன்று


கார்த்திக்ராமஸ்(12:08:27am): மீனவர்கள் பற்றி அதிக தவல்கள் இல்லை


கார்த்திக்ராமஸ்(12:08:48am): யாராவது ஒரு தொடர்பு ஏற்படுத்த முயலலாம்


வாசன்(12:08:53am): என்னுடைய கனவு/விருப்பம் என்னவென்றால்,இம்முயற்சி நீடித்து நிலைக்கும் ஒரு திட்டமாய் அமைய வேண்டும்...


கார்த்திக்ராமஸ்(12:09:06am): ஒத்துக்கொள்கிறேன் வாசன்


கார்த்திக்ராமஸ்(12:09:44am): மேலும் , மாலன் சொன்னதில் எளிதில் உடனடியாய் செய்யக்கூடியது என்று கணினி வாங்கி தபோவனத்து அனுப்புவது பற்றி குறிப்பிட்டேன்


கார்த்திக்ராமஸ்(12:10:04am): மேலும் தத்து எடுப்பது பற்றி எழுதி இருந்தேன்


கார்த்திக்ராமஸ்(12:10:32am): நான் மேலே சொன்ன அனைத்தையும் நானோ , ரோசாவோ நாளை பதிவில் வெளியிடுவோம்


சீமாச்சு(12:10:39am): பத்ரி சொன்னார். ஒரு ஸ்டீம் போட் வாங்க் ஒரு லட்ச ரூபாய் தான் ஆகுமென்றூ. நாம் ஆளுக்கு பணம் போட்டு ஒரு நிதி ஆரம்பித்து மீனவர்களுக்கு வட்டியில்லாக் கடனும் மானியமும் தரலாமே.. நான் ரெடிப்பா..


வாசன்(12:10:41am): முன்னரே தெரிந்திருக்கும் உங்களிருவருக்கும்..இருந்தாலும் திரும்ப ஒரு தடவை: கோவை கல்லூரி மாணவிகள் நினைவாக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை,நிலைக்காமல் தொய்ந்து போய்விட்டது..


வாசன்(12:10:54am): ஏனெனில்,,


சீமாச்சு(12:10:57am): ஏன்..


கார்த்திக்ராமஸ்(12:10:58am): என்ன பிரச்சினை என சொல்லுங்கள் வாசன்


கார்த்திக்ராமஸ்(12:11:12am): அதைப்பற்றி யோசிக்க கேட்கிறேன்


சீமாச்சு(12:11:30am): revive பண்ணுவோமே வாசன்..


வாசன்(12:11:32am): ஆரம்பத்திலிருந்த ஆர்வம் அவரவர்களின் தினசரி வாழ்க்கை ஏற்ற இறக்கங்களில் அடிபட்டு போனது.


கார்த்திக்ராமஸ்(12:11:56am): இது போன்ற இடத்தில்தான் வலைப்பதிவு போன்றவை இன்றியமையாதவை ஆகின்றன


கார்த்திக்ராமஸ்(12:12:02am): என் தாழ் அபிப்


கார்த்திக்ராமஸ்(12:12:19am): தொடந்து சந்திப்பு இருக்கவேண்டும்


கார்த்திக்ராமஸ்(12:12:37am): எழுத்துக்கள், அரட்டை தொடர்ந்து நடக்கவேண்டும்


கார்த்திக்ராமஸ்(12:12:53am): இடையிடையே சீரியஸ் விஷயங்கள் நடக்கவேண்டும்


வாசன்(12:13:02am): இணைய நண்பர்கள் ஒன்றுகூடி இந்திய ரூபாய் 65000.ஓ தான் திரட்ட முடிந்தது...அறக்கட்டளையை பதிவு செய்ய,தமிழக அரசு பதிவாளருக்கு கொடுத்த சில ஆயிர லஞ்சமும் இதில் அடங்கும் ;((


கார்த்திக்ராமஸ்(12:13:23am): அந்த அறக்கட்டளை இன்னும் உள்ளதா?


சீமாச்சு(12:13:32am): வெறும் 65000 தானா.. இன்னும் பண்ணலாமே...


வாசன்(12:13:33am): சென்னை நண்பர்கள் மனம் வெதும்பி போனார்கள்..


வாசன்(12:13:37am): ஆம்..


வாசன்(12:13:47am): தமிழம் அறக்கட்டளை...


சீமாச்சு(12:13:48am): எனக்கு இதைப்பற்றி தெரியவே தெரியாதே


கார்த்திக்ராமஸ்(12:14:01am): எனக்கும் இப்போது தான் தெரியும்


வாசன்(12:14:14am): மன்னிக்கவும்..


கார்த்திக்ராமஸ்(12:14:53am): இன்னும் இயங்குகிறதா அவ்வறக்கட்டளை


சீமாச்சு(12:15:02am): வாசன் இது தான் தருணம் மறுபடியும் அதை revive பண்ணுங்கள்.. உதவிகளை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்..


வாசன்(12:15:02am): எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என ஊகித்துக் கொண்டேன்..நீங்களிருவரும் கடந்த 2/3 வருடங்களில் இணையத்தில் உலவ ஆரம்பித்திருக்கலாம்


சீமாச்சு(12:15:40am): உங்களுக்கு இதில் ஒப்புமை இருந்தால் நான் பொறுப்பெடுத்துக்கொள்ளத் தயார்...


கார்த்திக்ராமஸ்(12:15:52am): பத்ரி ஒரு அறக்கட்டளை தொடங்குவது பேசியதாய் ஞாபகம்


வாசன்(12:15:58am): சென்னை நண்பர்கள் நாக.இளங்கோவன்,இராம.கி மற்றும் கோவை முனைவர் ரமணி நாயுடு ஆகியோருடன் தொடர்பு கொண்டு புதுபிக்கலாம்..


கார்த்திக்ராமஸ்(12:16:10am): சூப்பர் ஐடியா


கார்த்திக்ராமஸ்(12:16:26am): அறக்கட்டளையின் நோக்கம் என்ன என்ன வாசன்


வாசன்(12:16:53am): இந்த உரையாடலை மின்னஞ்சலில் அந்த நண்பர்களுக்கு அனுப்புகிறேன்.


வாசன்(12:16:56am): நோக்கம்:


சீமாச்சு(12:17:17am): செய்யுங்கள் வாசன்.. நான் ரெடி.. என்னுடன் இன்னும் நிறைய பேரைச் சேர்க்கவும் தயார்.. Goals & mission & financial targets set பண்ணுங்கள்...


சீமாச்சு(12:18:01am): யாராவது சேவை நோக்கமுள்ளவர்களை நிதிநிலை பொறுப்பாளர்களாக்குங்கள்


வாசன்(12:18:20am): பேருந்தில் உயிருடன் எரிக்கப்பட்ட 3 மாணவிகள் நினைவாக 60000.00 ரு அறக்கட்டளை ஏற்படுத்தி அதில் கிடைக்கும் வருவாய் ஐ வைத்து ஏழ்மையானவர்களுக்கு உதவுதல்


கார்த்திக்ராமஸ்(12:18:39am): நல்லது


கார்த்திக்ராமஸ்(12:18:57am): இப்ப என்ன தேவை வாசன்


வாசன்(12:19:20am): நிச்சயம் அ.கட்டளையை ஏற்படுத்திய 3 இந்திய நண்பர்களை கேட்டு பார்க்கிறேன்..


சீமாச்சு(12:19:39am): 60000 பத்தாது.. அதை 10 லட்சமாக்குங்கள்.. 3-6 மாதம் டார்கெட் வையுங்கள்.


கார்த்திக்ராமஸ்(12:19:43am): வாசன் எனக்கு ஒன்று தோன்றுகிறது


கார்த்திக்ராமஸ்(12:20:47am): ஏற்கனவே சுனாமிக்காக வேலை செய்யும் ,பத்ரி ராம்கி போன்றவர்களை இதில் இணைப்பது சரியாகும்; அதனால் பலன் னிறைய இருக்கும் என தோன்றுகிறது


கார்த்திக்ராமஸ்(12:20:57am): னீங்கள் என்ன சொல்கிறீர்கள்


சீமாச்சு(12:21:06am): வாசன் கடமை அழைக்கிறது.... முடிவெடுத்து என் பங்கு என்ன சேவைகள் என்று சொல்லுங்கள்.. தவறாமல் நிறைவேற்றுகிறேன்...


வாசன்(12:21:26am): சென்னை அன்பர்கள் ஒத்துப் போனால் நிச்சயம் செய்யலாம்


சீமாச்சு(12:21:54am): cio2003@yahoo.com


வாசன்(12:22:02am): vaasus@gmail.com க்கு அனுபுங்கள்


மூர்த்தி(1:15:18pm): தற்போது எங்கே அண்ணா பாதிக்கப் பட்ட மக்களைத் தங்க வைத்துள்ளார்கள்?


மூர்த்தி(1:15:29pm): பள்ளிகள் திறந்து விட்டதாக அறிந்தேனே


எஸ்.கே(1:15:33pm): ஆமாம்


மூர்த்தி(1:15:34pm): சரி


எஸ்.கே(1:15:37pm): ஆனால்


மூர்த்தி(1:15:43pm): சொல்லுங்க அண்ணா


எஸ்.கே(1:16:02pm): மன வருத்தம் கொல்ளத்தக்க விஷயம் நிறைய இருக்கிறது


மூர்த்தி(1:16:14pm): கொஞ்சம் அறிவேன்


எஸ்.கே(1:16:23pm): நிவாரண நிதி 5 லட்சம் என்ற அறிவிப்புக்கப்புறம்


மூர்த்தி(1:16:29pm): சரி


மூர்த்தி(1:17:18pm): அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க அரசு ஏதும் நில மீட்பு விசயங்களில் இறங்கியதாகத் தெரியவில்லையே


மூர்த்தி(1:17:44pm): மறுபடியும் கடல் கரை என்றால் அவர்களின் வாழ்க்கை வாழ்நாள் முடுதும் தண்ணீரில்தானா?


மூர்த்தி(1:18:18pm): நேற்றைய விவாதத்தில் சொன்னதுபோல கடற்கரையோரம் சிறு காடுகள் வளர்க்கலாம்


மூர்த்தி(1:18:40pm): அதனை பூங்கா போன்ற அமைப்பாகவும் மாற்றலாம்


எஸ்.கே(1:23:27pm): சின்மயா மிஷன் அந்த வகை தொண்டுகள் செய்வதாக செய்தி பார்த்தேன்


மூர்த்தி(1:23:37pm): ஆமாம்


எஸ்.கே(1:23:39pm): ஏனென்றால்


மூர்த்தி(1:23:46pm): சொல்லுங்க


எஸ்.கே(1:24:09pm): மனப்புண்களும் ஆற்றப்பட வேண்டும்


மூர்த்தி(1:24:17pm): ஆமாம்


மூர்த்தி(1:24:30pm): தற்போது அவர்களுக்குத் தேவை ஆறுதல்


எஸ்.கே(1:24:37pm): ஆமாம்


மூர்த்தி(1:24:56pm): அந்த கோரக் காட்சிகளைக் கண்டவர்கள் மனப் பாதிப்பிற்கு உள்ளானதாக தொலைக் காட்சியில் பார்த்தேன்


எஸ்.கே(1:25:09pm): ஆனால் நிவாரண நிதியைக் கைப்பர்றுவதற்காக மக்கள் நடந்துகொள்ளும் முறைதான்


மூர்த்தி(1:25:20pm): ஆமாம் நேற்று பத்ரி சொன்னார்


எஸ்.கே(1:25:35pm): ஆச்சரியமாகவும் இருக்கிறது, அருவருப்பாகவும் இருக்கிறது


மூர்த்தி(1:25:37pm): ஏற்கெனவே இறந்தவர்களையும் பட்டியலில் இணைப்பதாக அறிந்தேன்


எஸ்.கே(1:25:50pm): "இவர்களா இப்படி?" என்று நினைக்கத் தோன்றுகிறது


மூர்த்தி(1:26:06pm): எந்த ஒரு நல்ல நோக்கத்திலும் தீய செயல்கள் குறிக்கிடுவது உண்டு


மூர்த்தி(1:26:17pm): அதற்காக நோக்கம் தவறு கிடையாது


எஸ்.கே(1:26:25pm): அது இத்தனை பெரிய அளவில் வெளிப்படுகிறது


மூர்த்தி(1:26:28pm): ஓரிருவர் அப்படி இருக்கலாம்


மூர்த்தி(1:26:42pm): அரசியல்வாதிகள் குறுக்கீடு உண்டா அண்ணா?


எஸ்.கே(1:26:53pm): அதிகமாக இல்லை


எஸ்.கே(1:27:03pm): அவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள்


மூர்த்தி(1:27:03pm): திருமாவளவன் மட்டுமே வரிந்துகட்டி செயல்களில் இறங்கியதாக அறிந்தேன்


எஸ்.கே(1:27:08pm): ஆமாம்


மூர்த்தி(1:27:32pm): விவேக் ஓபராய்க்கு இருக்கும் பற்று பாசம் இங்குள்ளவர்களுக்கு இல்லாமல் போயிற்றே


எஸ்.கே(1:27:41pm): ஆமாம்


எஸ்.கே(1:27:57pm): அவருடைய பணி ஆச்சரியமானது


எஸ்.கே(1:28:04pm): something unique


மூர்த்தி(1:28:12pm): எங்கிருந்தோ வந்து இவாண்டர் ஹோலிபீல்டு கோடிகோடியாய் செய்யும்போது..தமிழகத்தை சுரண்டிப் பிழைத்த நடிக நடிக நடிகையர்...


மூர்த்தி(1:28:16pm): என்ன சொல்வது


எஸ்.கே(1:28:29pm): நீங்கள் இலங்கையில் இருக்கிறீர்களா


விஜயாலயன்(1:28:35pm): ஆமாம்


விஜயாலயன்(1:28:41pm): கொழும்பில்


எஸ்.கே(1:29:07pm): அங்கு ஏஎதாவது நிவாரணம் போய்ச்சேருகிறதா


விஜயாலயன்(1:29:19pm): ஆனால் சுனாமி தாக்கியபோது திருகோணமலையில் இருந்தேன்


மூர்த்தி(1:29:19pm): கோபி அண்ணானை தமிழ் பகுதிகளுக்கு அரசு விட மறுத்ததாக அறிந்தோம். உண்மையா விஜயாலயன்??


எஸ்.கே(1:29:21pm): முல்லைத் தீவு


விஜயாலயன்(1:29:26pm): ஆமாம்


எஸ்.கே(1:29:33pm): யாழ், திரிகோணமலை


எஸ்.கே(1:29:41pm): மட்டக்களப்பு


விஜயாலயன்(1:29:42pm): இங்கே அரசியல், இனப்பாகுபாடுகள் அதிகம்


மூர்த்தி(1:29:58pm): பத்ரி அவர்களின் மருந்து பார்சல்கூட அரசினால் கையகப் படுத்தப் பட்டது என்றும் இன்னும் மக்களைச் சென்றடையவில்லையாம்


மூர்த்தி(1:30:31pm): வெளிநாட்டு உதவிகள் தமிழ் பகுதிகளை அடைகிறதா விஜயாலயன்?


எஸ்.கே(1:30:33pm): நார்வே, செஞ்சிலுவைச் சங்கம் முதலியவை ஏதாவது செய்ய முடியுமா


மூர்த்தி(1:30:43pm): அஜீவன் அண்ணா கட்டுரையாக வடித்திருந்தார்


விஜயாலயன்(1:30:46pm): நான் நேரடியாக திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் சென்றேன்


மூர்த்தி(1:30:56pm): சரி


எஸ்.கே(1:31:21pm): தயவு செய்து இங்குள்ளவர்கள் எவ்வகையில் உதவ முடியும் என்பதைக் கண்டு சொல்லுங்கள்


விஜயாலயன்(1:31:30pm): அங்கெல்லாம் நிவாரணப் பொருட்கள் அரசு மூலம் சென்றடையவில்லை


எஸ்.கே(1:31:36pm): பலர் மன எழுச்சியுடன் இருக்கிறார்கள்


மூர்த்தி(1:31:39pm): சரி


விஜயாலயன்(1:31:54pm): TRO மட்டுமே ஒரே வழி


எஸ்.கே(1:32:05pm): ok


விஜயாலயன்(1:32:25pm): அவர்கள் நேர்த்தியாக செய்கிறார்கள்


மூர்த்தி(1:32:32pm): சரி


மூர்த்தி(1:33:06pm): இந்தோவில்கூட அரசியல்


எஸ்.கே(1:33:14pm): சேதம், உயிழப்பு, குழந்தைகளின் நிலை முதலியவை பற்றி அறிந்தபின் தெரிவியுங்கள்


மூர்த்தி(1:33:17pm): உதவி செய்பவர்களின்கூட ராணுவம் இருக்குமாம்


விஜயாலயன்(1:33:24pm): அரசின் இனப்பாகுபாடு, அரச அதிகாரிகளின் சோம்பேறித்தனம் என்று....


மூர்த்தி(1:33:44pm): எந்த சமயத்தில் எதனைப் பேசுவது என ...ஒன்றுமே தெரியாமல்


மூர்த்தி(1:33:57pm): ம்..சொல்லுங்க


விஜயாலயன்(1:34:11pm): கிடைத்த பொருட்களைக் கூட அரச அதிகாரிகள் மக்களுக்கு வழங்கவில்லை


மூர்த்தி(1:35:14pm): பரிசோதனை செய்தபின்னாவது வழங்கி இருக்க வேண்டும்


விஜயாலயன்(1:35:26pm): யாழில் ஒரு அரச அலுவலகத்தில் வெளிநாட்டினால் வழங்கப்பட்ட கூடாரங்கள் பல தேங்கிக்கிடந்தன


மூர்த்தி(1:35:37pm): பேரழிவு நடந்திருக்கும்போது இனமென்ன மதமென்ன?


மூர்த்தி(1:35:48pm): ஆமாம் அறிய நேரிட்டது


மூர்த்தி(1:36:18pm): தமிழ் பகுதிகளில் இருந்து ராணுவத்தி ¦வையேற தமிழ்செல்வன் அறிக்கை விட்டார்


மூர்த்தி(1:36:28pm): அதனால் ஏதேனும் பாதகம் உண்டா விஜயாலயன்?


விஜயாலயன்(1:36:33pm): அவற்றை நானும் எனது நண்பர்களும் எங்கள் வாகனத்தில் எடுத்துச் சென்று அகதி முகாமில் கொடுத்தோம்


மூர்த்தி(1:36:47pm): நல்லது..நல்லது


மூர்த்தி(1:37:22pm): சிங்கள புத்த பிக்குகளும்கூட பாதிக்கப்பட்ட தமிழ் பகுதிகளுக்கு சென்று உதவி செய்தார்களாம்


மூர்த்தி(1:37:54pm): புலிகள் பொருட்களைப் பிடுங்குகிறார்கள்..உள்ளே விட மறுக்கிறார்கள் என்பதெல்லாம் பொய் என அந்த பிக்கே சொல்லி இருக்கிறார்


விஜயாலயன்(1:37:55pm): அப்படி அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை


மூர்த்தி(1:38:09pm): அஜீவன் அண்ணா எழுதி இருந்தார்


விஜயாலயன்(1:39:21pm): எங்கள் நிறுவனத்தில் எங்கள் சம்பளப்பணத்தில் வாங்கப்பட்ட பொருட்களை தெற்கிற்கு மட்டுமே கொடுத்தார்கள்


மூர்த்தி(1:39:34pm): ம்


விஜயாலயன்(1:41:09pm): சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து தனிப்பட்ட முறையில் பணம் சேர்த்து அகதி முகாம்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் தேவையானவற்றை வாங்கிச்சென்று கொடுத்தோம்


எஸ்.கே(1:41:15pm): தெற்கே தமிழர் பகுதியில் சேதம் உண்டா


விஜயாலயன்(1:41:20pm): இல்லை


எஸ்.கே(1:41:25pm): ok


மூர்த்தி(1:41:34pm): ம்


எஸ்.கே(1:41:47pm): அவர்கள் மேட்டுப் பகுதியில் உள்ளார்கள் போல


விஜயாலயன்(1:42:31pm): அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு (வன்னி), யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள்


விஜயாலயன்(1:43:13pm): கிட்டத்தட்ட 16000 பேர் இந்த இடங்களில் மட்டும் கொல்லப்பட்டனர்ட்


மூர்த்தி(1:43:22pm): அய்யோ


மூர்த்தி(1:43:43pm): தமிழர்கள் அதிகம் பாதிக்கப் பட்டனர்..உதவிகள் என்னவோ அங்கே செல்கிறது


விஜயாலயன்(1:45:06pm): கொல்லப்பட்டவர்களின் சடலங்கள், காயப்பட்டவர்கள், சேதங்கள் என்பவற்றை நேரில் பார்த்ததன் தாக்கம் என்னை நிரம்ப பாதித்துவிட்டது


மூர்த்தி(1:45:18pm): ம்


மூர்த்தி(1:45:44pm): இணையத்தில் பார்க்கவே மனம் பதறுகிறது


விஜயாலயன்(1:46:29pm): அதனால் 2ம் கட்ட பணிகளிலும் இணைய திட்டமிட்டுள்ளேன்


விஜயாலயன்(1:47:57pm): விரைவில் தமிழ் பிரதேங்களில் counselling செய்வதற்கு செல்வேன்.


விஜயாலயன்(1:48:56pm): அதற்கான பயிற்சிகளிற்கு இணைந்துள்ளேன்


மூர்த்தி(1:49:01pm): நல்லது விஜயாலயன்


மூர்த்தி(1:49:23pm): நண்பர்களையும் அதில் இணையுங்கள்


விஜயாலயன்(1:50:01pm): நிறைய இடங்களில் பாதிக்கப்பட்ட பலர் ஆறுதல் சொல்ல யாரிமில்லாமல் இருக்கின்றார்கள்


மூர்த்தி(1:50:01pm): நாளை பாதிக்கப் பட்ட இடங்களுக்கு செல்வதாக இருந்தீர்களே...


ரஜினி ராம்கி(1:50:17pm): இன்றிரவு கிளம்புகிறேன்


மூர்த்தி(1:50:36pm): பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லவுமா மனமில்லை@விஜயாலயன்


மூர்த்தி(1:50:43pm): சரி@ராம்கி


ரஜினி ராம்கி(1:50:43pm):
நேராக கரூர் சென்று பெட்ஷீட்களை சேகரித்துக்கொண்டு நாளை மாலை பூம்புகார் பகுதிகளுக்கு சென்றுவிடுவேன்

மூர்த்தி(1:50:52pm): நல்லது


ரஜினி ராம்கி(1:51:11pm):
எல்லாம் திட்டப்படி நடந்தால் பொங்கலுக்குள் அனைத்து பெட்ஷீட்களையும் விநியோகித்துவிட முடியும்

மூர்த்தி(1:51:20pm): உஷா,சைலஜா,ஐயப்பன் எல்லாம் வருகிறார்களா?


விஜயாலயன்(1:51:23pm): இல்லை... எல்லோரும் பாதிக்கப்பட்ட இடங்களில் யாரும் அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடிவதில்லை


மூர்த்தி(1:51:30pm): ம்


ரஜினி ராம்கி(1:51:33pm): இல்லை.


மூர்த்தி(1:51:41pm): சரி


மூர்த்தி(1:51:55pm): சென்னை நண்பர்களை அழைத்துக் கொள்ளலாம் ராம்கி


ரஜினி ராம்கி(1:51:59pm): நேற்று சுனாமியால் பாதிக்கப்பட்ட சந்திரபாடி கிராமத்து பிரசிடெண்ட் என்னைதொடர்பு கொண்டார்


மூர்த்தி(1:52:07pm): சரி


ரஜினி ராம்கி(1:52:23pm):
இல்லை மூர்த்தி. மயிலாடுதுறையிலேயே போதுமான ஆட்கள் இருக்கிறார்கள். பிரச்னையில்லை

மூர்த்தி(1:52:23pm): பெரிய கிராமமா அது?


விஜயாலயன்(1:52:29pm): அவசர வேலை.... மீண்டும் சிறிது நேரத்தில் இணைகிறேன்


மூர்த்தி(1:52:29pm): சரி


ரஜினி ராம்கி(1:52:46pm): ரொம்பவும் சின்ன கிராமம். காரைக்கால், தரங்கம்பாடி எல்லையில் இருக்கிறது


மூர்த்தி(1:52:52pm): சரி


மூர்த்தி(1:53:10pm): ஊராட்சித் தலைவர் என்ன கேட்டார் ராம்கி?


ரஜினி ராம்கி(1:53:21pm): சரி. கொஞ்சம் வேலையிருக்கிறது. மதியத்துக்கு பின்னர் வருகிறேன்


மூர்த்தி(1:53:30pm): சரி ராம்கி


மூர்த்தி(1:53:48pm): மற்றவர்களும் விரைவில் வருவார்கள்


ரஜினி ராம்கி(1:54:02pm): கொஞ்சம் உதவிகள் கேட்டார். முக்கியமாக கட்டுமரங்கள் சம்பந்தமாக. அதெல்லாம் பெரிய தொகை. நேரில் பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்


மூர்த்தி(1:54:08pm): நானும் விடை பெறட்டுமா கிச்சு அண்ணா?


மூர்த்தி(1:54:27pm): முதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்


நேச குமார்(10:41:40pm): நான் நேற்று பேசியவரை


நேச குமார்(10:41:54pm): கண் பிரச்சினை, பயந்த மாதிரி இல்லை


எஸ்.கே(10:42:00pm): நல்லது


நேச குமார்(10:42:02pm): சண்முக சுந்தரம் என்று ஒரு டாக்டர்


நேச குமார்(10:42:11pm): நியூக்ளியர் மெடிசினில் எக்ஸ்பேர்ட்


எஸ்.கே(10:42:20pm): ok


நேச குமார்(10:42:43pm): BARC ள் வேலை செய்தவர்


நேச குமார்(10:42:58pm): அவரிடம் செக் செய்தோம்


நேச குமார்(10:43:32pm): பயந்து போய் கண் பார்வை போய்விட்டது என்று நினைத்திருக்கிறார்கள். மங்கலாகத் தெரியவே


நேச குமார்(10:43:46pm): மேலும், நிறைய பேரி சிறுவர்கள்


எஸ்.கே(10:44:04pm): அவ்வளவு minerals kadal padukaiyil irukkumaa


நேச குமார்(10:44:15pm): இருக்கிறது என்று சொன்னார்கள்


எஸ்.கே(10:44:20pm): சரி


நேச குமார்(10:44:25pm): நீங்கள் போகும் போது பாருங்கள்


நேச குமார்(10:44:32pm): டன் கணக்கில் கறுப்பு மண்


எஸ்.கே(10:44:33pm): பாக்கறேன்


எஸ்.கே(10:44:50pm): அதிலேயே பயந்து போயிருப்பாங்க


நேச குமார்(10:44:56pm): அது கடல் களிமண்ணாம் ,அதனுடன் இந்த மினரல்கள் கலந்து வந்துள்ளன


நேச குமார்(10:45:14pm): ஆம், அந்தக் கறுப்பு குழம்பு கண்களுக்குள் போகவே கெமிக்கல் என்று


நேச குமார்(10:45:30pm): நினைத்து பயந்து போயிருக்கின்றார்கள் ஆரம்பத்தில்,


நேச குமார்(10:46:12pm): இல்லிமேட் எனும் மினரல் நிறைய வந்து குவிந்துள்ளதாம், அது செல்போன்களில் உபயோகப் படுத்தும் மினரலாம்


நேச குமார்(10:46:47pm): எல்லோருக்கும் அரசு சார்பில் நான்காயிரம் ரூபாய் தந்துள்ளார்கள்


நேச குமார்(10:48:01pm): ஒரு லட்ச ரூபாய்க்குத்தான், தாசில்தார் சர்ட்டிபிகேட், போலீஸ் புகார் காப்பி போன்றவை கேட்கிறார்களாம்


எஸ்.கே(10:48:42pm): அரசு இயந்திரம் இப்போ வேலை செய்யுதா


நேச குமார்(10:53:47pm): ஆம் எஸ்கே, அப்படித்தான் கேள்விப்படுகிறேன்


Wednesday, January 12, 2005

சுனாமி அரங்க உரையாடல்கள்-3

ஜனவரி 11, 2005 செவ்வாய் அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள்

திருமலை(8:24:23am): என்ன முடிவு செய்தீர்கள்?


மூர்த்தி(8:24:28am): ரஜினிராம்கியோடு ஐகாரஸ்,உஷா,சைலஜா இன்னும் பலரும் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு நேரில் செல்வதாகக் கூறினார்கள்


திருமலை(8:24:44am): உஷா சென்னையில் இருக்கிறா ?


மூர்த்தி(8:24:48am): வரும் 13க்கு மேல் அவர்கள் அங்கு செல்வதாக சொன்னார்கள்


திருமலை(8:24:54am): சரி


மூர்த்தி(8:24:57am): பெங்களூரில் இருக்கிறார்


திருமலை(8:25:04am): குழப்பமாக இருக்கிறது


திருமலை(8:25:15am): இங்கு பெருமளவில் நிதி சேர்கிறது


மூர்த்தி(8:25:19am): யாருமில்லா குழந்தைகளை தத்து எடுப்பது பற்றியும் பேசினோம்


திருமலை(8:25:26am): பல்வேறு தன்னார்வ நிறுவனங்களுக்கு


மூர்த்தி(8:25:30am): ஆமாம் நிதி முக்கிய தேவைதான்


மூர்த்தி(8:25:44am): அது சரியாகப் பயன்படுத்தப் பட்டால் மிக நன்று


மூர்த்தி(8:25:55am): பத்ரியும் கலந்துகொண்டார் நேற்று


மூர்த்தி(8:26:08am): இலங்கை நிலவரங்கள் பற்றியும் பேசினோம்


திருமலை(8:26:11am): அதை யாருக்கு எங்கு அளிப்பது என்பதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன


மூர்த்தி(8:26:22am): பணத்தையா?


மூர்த்தி(8:26:34am): பத்ரிக்கோ அல்லது ராம்கிக்கோ அனுப்புங்கள்


திருமலை(8:26:48am): அனைத்து நிறுவனங்களிலும் 100 சதவீத மாட்ச்சிங் கிராண்ட் அளிக்கிறார்கள்


மூர்த்தி(8:26:53am): பிகேசிவகுமார் கொடுத்த பெட்சீட் எல்லாம் இனிதான் விநியோகிக்கனுமாம்


மூர்த்தி(8:27:05am): ரஜினி ராம்கி சொன்னார்


மூர்த்தி(8:27:06am): சரி


திருமலை(8:27:21am): அவையெல்லாம் இன்னும் தேவைப்படுகின்றனவா இத்துனை நாட்கள் கழித்தும்?


மூர்த்தி(8:27:43am): இன்னும் சரியான தங்குமிடம் கிடைக்கவில்லை அல்லவா?


திருமலை(8:27:52am): அங்கே இருப்பவர்களுக்குத்தான் தெரியும்


மூர்த்தி(8:27:59am): பள்ளிகள் வேறு திறக்கப்பட்டு விட்டதால் அவர்களின் நிலை கஷ்டம்


திருமலை(8:27:59am): இன்னும் தேவைப் படலாம்


திருமலை(8:28:14am): ஆமாம்


மூர்த்தி(8:28:24am): அதனால் கோயில்கள், மடங்கள், பொது இடங்களில்தானே அவர்கள் தற்போது


மூர்த்தி(8:28:30am): அதனால் தேவைப்படலாம்


திருமலை(8:28:35am): ஆமாம்


திருமலை(8:29:00am): எத்தனை மணிக்கு இங்கு கூடுவார்கள்?


மூர்த்தி(8:29:12am): அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை


திருமலை(8:29:28am): ஆமாம் நேசகுமார் தெரிவித்திருந்தார்


மூர்த்தி(8:29:40am): நேற்று நாங்கள் கூடியது சிங்கை நேரப்படி மதியம் 2 மணி இருக்கலாம்


மூர்த்தி(8:29:56am): அருள்குமரனும் இருந்தார்


மூர்த்தி(8:30:06am): நம்பி வந்திருந்தார்


திருமலை(8:30:10am): சரி


மூர்த்தி(8:30:22am): அருள்குமரன் ஆன்லைனில் வந்தால் தொடர்பு கொள்ளுங்கள் அண்ணா


திருமலை(8:30:29am): சரி


மூர்த்தி(8:30:44am): ஆனால் நேற்று கூடிய நேரம் என்றால் உங்களுக்கு தூங்கும் நேரம் என நினைக்கிறேன்


திருமலை(8:30:54am): இப்பொழுது என்ன மணி?


மூர்த்தி(8:31:02am): 8.30காலை


திருமலை(8:31:37am): சரி எங்கள் நேரம் இரவு 9 மணிக்கு நான் வருகிறேன்


மூர்த்தி(8:31:50am): ஒரு கிராமத்தை நம் இணைய நண்பர்கள் தத்து எடுக்கலாம் என்று ராம்கி சொன்னார்


திருமலை(8:31:53am): இப்பொழுது இங்கே மாலை 4.30


மூர்த்தி(8:32:00am): அதனை யோசித்து செய்யவேண்டும்


மூர்த்தி(8:32:20am): அப்புறம் ஒரு பையனை தத்து எடுக்க நிறைய கஸ்டப்பட வேண்டி இருக்கிறதாம்


மூர்த்தி(8:32:26am): அப்படியா...சரி


திருமலை(8:32:34am): ஆமாம் அவ்வளவு எளிதல்ல


திருமலை(8:32:46am): அரசாங்கக் குறுக்கீடுகள் இருக்கும்


திருமலை(8:33:03am): இல்லாவிடில் பிள்ளைகளைத் திருடிச் சென்று விடுவார்கள்


மூர்த்தி(8:33:04am): ராம்கி யாரோ ஒரு பையனை மருத்துவப் படிப்புச் எகவை அவரின் ரஜினிபேன்ஸ் தளம் ஏற்றுக் கொண்டதாக சொன்னார்


மூர்த்தி(8:33:10am): ஆமாம்..


மூர்த்தி(8:33:16am): அது பற்றியும் பேசினோம்


திருமலை(8:33:42am): அரசாங்கம் தேவைப்படும் அத்துனை வேலைகளையும், தேவைகளையும் பட்டியலிட்டு


மூர்த்தி(8:33:58am): தமிழகத்தில் இருப்பவர்களால் நேரில் பார்க்க முடியும்


திருமலை(8:34:00am): அவற்றை பல்வேறு நிறுவனங்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும்


மூர்த்தி(8:34:06am): ஆமாம்


மூர்த்தி(8:34:16am): அதனால் நன்கு யோசித்து செயல்படவேண்டும்


திருமலை(8:34:16am): அவர்கள்தான் அது போன்ற பணிகளை ஒருங்கிணைக்க முடியும்


மூர்த்தி(8:34:20am): ஆமாம்


மூர்த்தி(8:34:35am): நாம் தகவல் சாதனங்கள் மூலம்தானே உணர்கிறோம்


மூர்த்தி(8:34:54am): அதனால் பத்ரி,ராம்கியை முன்னிறுத்தி உதவிகள் தொடரட்டும் என பேசினோம்


திருமலை(8:34:54am): ஒரு உதாரணத்துக்கு ஒரு 1000 தேவைகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் இருக்கும் தன்னார்வலர்கள் அனைவரும் ஆளுக்கொன்றாக எடுத்து


மூர்த்தி(8:35:00am): ம்


திருமலை(8:35:01am): சரியாகச் செய்ய முடியும்


மூர்த்தி(8:35:05am): ஆமாம் அதே


திருமலை(8:35:19am): இல்லாவிடில் குழப்பமும் செய்வவனச் செய்தலுமே மிஞ்சும்


மூர்த்தி(8:35:22am): பத்ரி இலங்கைக்கு அனுப்பிய மருந்து பொருட்கள் இன்னும் சென்று சேரவில்லையாம்


மூர்த்தி(8:35:37am): அரசாங்கக் கைகளில் இருக்கிறதாம் மருந்துகள்


திருமலை(8:35:40am): இலங்கை நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது


மூர்த்தி(8:35:56am): இன்னும் உதவி தேவைப்பட்டும் அனுப்ப ஐடியா தெரியாமல் பேசினார்


திருமலை(8:36:00am): எனக்குத் தெரியவில்லை


மூர்த்தி(8:36:15am): தமிழ் பகுதிகளுக்கு உதவிகள் சரிவர போவதில்லையாம்


திருமலை(8:36:24am): ம்ம்ம்


மூர்த்தி(8:36:40am): கோபி அண்ணானைக்கூட புலிகளின் கட்டுப்பாட்டுக்குச் செல்ல சந்திரிகா தடை விதித்து விட்டாராம்


திருமலை(8:36:56am): படித்தேன்


மூர்த்தி(8:37:00am): மீறிப் போனால் ஜெயலலிதா மாதிரி கைது செய்தாலும் செய்வார்


மூர்த்தி(8:37:06am): பாவம் மக்கள்


மூர்த்தி(8:37:22am): இடையில் புலி,அரசு அரசியல் சண்டை


திருமலை(8:37:53am): தமிழீழத்தைப் பொருத்தவரை ரெட் க்ராஸ் போன்ற அமைப்புகளை அனுமதித்தால் அவர்களுக்கு நேரடியாக உதவி அனுப்பலாம்


திருமலை(8:38:22am): இங்குள்ள பலருக்கும் யாருக்கு அனுப்புவது என்பதில் சந்தேகங்களுகும் குழப்பங்களும் உள்ளன


மூர்த்தி(8:38:27am): டி.ஆர்.ஓ என்ற அமைப்புக்குத் தானே பத்ரி அனுப்பினார்


மூர்த்தி(8:38:46am): அது அரசு புலிகள் சாரா தன்னார்வ தொண்டு அமைப்பு


திருமலை(8:38:55am): அது புலிகளின் ஒரு அமைப்பு என்ற சந்தேகம் பலரையும் உதவி செய்யத் தயங்க வைக்கிறது


மூர்த்தி(8:39:14am): அப்படித்தான் பலரும் சொல்கிறார்கள்


மூர்த்தி(8:39:28am): ஆனால் அதில் சிங்கள உறுப்பினர்களும் இருக்கிறார்கள்


திருமலை(8:39:50am): அதனால்தான் அங்கு சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ரெட் கிராஸ் போன்ற அமைப்புகள் அங்கு சென்று செயல் பட வேண்டும்


மூர்த்தி(8:39:57am): புலிகளின் நடவடிக்கைகளில் அவர்கள் தங்களை பிணைத்தது இல்லை என படித்தேன்


மூர்த்தி(8:40:02am): ஆமாம்


மூர்த்தி(8:40:14am): செஞ்சிலுவைச் சங்கம் இருக்கிறதா என தெரியவில்லை


திருமலை(8:40:21am): இருக்கலாம், நமக்குத் தெரிவதில்லை, வதந்திகள்தான் அதிகம் வருகின்றன


மூர்த்தி(8:40:46am): அப்படியே அதனிடம் நாம் அளித்தாலும்கூட சென்று சேரும் உதவிகள் யாவும் அரசிடம்தான் போகிரதாம்


மூர்த்தி(8:41:01am): தமிழ்ப் பகுதிகளுக்கு செல்வதில்லையாம்


திருமலை(8:41:23am): குழப்பமான நிலைமைதான்


மூர்த்தி(8:41:28am): ஆமாம்


மூர்த்தி(8:41:46am): போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுனாமியின் தாக்கம்


மூர்த்தி(8:41:52am): தமிழகம் பரவாயில்லை


திருமலை(8:41:53am): சரி மூர்த்தி, மீண்டும் பிறகு கலந்து கொள்கிறேன்


மூர்த்தி(8:42:09am): உதவி நிதிகள் அரசிடமிருந்து சென்று சேரத் தொடங்கி உள்ளதாம்


திருமலை(8:42:09am): இங்கு நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை விளக்குகிறேன்


மூர்த்தி(8:42:13am): சரி


பிகேசிவகுமார்(10:36:16am): அருள்குமரன் வலைப்பதிவில் நேற்று காலை விவரங்கள் உள்ளன


ஐயப்பன்(10:36:33am): ஓ உரல் ??


பிகேசிவகுமார்(10:37:08am): http://www.shockwave-india.com/tamil/blog/


நேச குமார்(10:52:44am): டிடானியம், இல்லிமேட் போன்ற கனிமங்களை கொண்டுவந்து நாகப்பட்டினம் பகுதிகளில் அடித்துள்ளது சுனாமி, டன் கணக்கில்


பிகேசிவகுமார்(10:53:16am): எங்கிருந்து இவற்றை எடுத்துக் கொண்டு வந்தது


நேச குமார்(10:53:20am): அங்கு செவைபுரிந்து வரும் எனது நன்பர் கூறியிருந்தார்


பிகேசிவகுமார்(10:53:23am): ஏதும் தொழிற்சாலைகள் அருகில் உள்ளனவா


நேச குமார்(10:53:26am): இரண்டாவது அலை அடித்தபோது கறுப்புக்கலரில் குழம்பை கொண்டுவந்து


நேச குமார்(10:54:00am): அடித்தது, அதில்தான் கண்பார்வை பாதிக்கப் பட்டது என்று


பிகேசிவகுமார்(10:54:08am): அல்லது, இவை பூகம்ப லாவாவிலிருந்து வந்தனவா


நேச குமார்(10:54:14am): கடல் களிமண் அது, அதில் இந்த மினரல்கள்


பிகேசிவகுமார்(10:54:24am): gotcha


நேச குமார்(10:54:27am): இல்லை, கடலுக்கு அடியாழத்திலிருந்து புரட்டியதால்


பிகேசிவகுமார்(10:54:47am): நன்றி. புரிந்தது.


பிகேசிவகுமார்(10:54:57am): கேட்க கஷ்டமாக இருக்கிறது


நேச குமார்(10:55:02am): இந்த மினரல்கள் கண்ணுக்குள் போவதால் இப்படிப் பட்ட பாதிப்புகள் நிகழ்ந்துள்ளதா எனத் தெரிய வில்லை


பிகேசிவகுமார்(10:55:09am): ம்ம்ம்


நேச குமார்(10:55:25am): நேரில் பேசும்போது கேள்விப்பட்ட விஷயங்கள் ரொம்பவே கஷ்டப் படுத்தின


நேச குமார்(10:55:58am): நாகூர் , சாமந்தாம் பேட்டையில் பணிபுரிந்து வருகின்ற சிலரிடம் நேற்றுப் பேசினேன்


நேச குமார்(10:57:38am): அமிர்தானந்தமயி ஆசிரமத்துக்காரர்கள் மிகவும் சிறப்பாக பணிபுரிகிறார்கள் என்றார்கள், 7000 பேருக்கு மூன்று வேளை சாப்பாடு போடுகிறார்களாம்


நேச குமார்(10:58:05am): ஷெல்டர்ஸ் கட்டிக் கொடுக்கும் பணியையும் நேற்று துவக்கி இருக்கிறார்கள்


பிகேசிவகுமார்(10:58:33am): ஓ. அப்படியா


நேச குமார்(10:58:53am): ஆம், எல்லோரும் புகழ்ந்து சொன்னார்கள்,


பிகேசிவகுமார்(10:59:02am): பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்கள் யாராக இருந்தாலும் பாராட்ட வேண்டும்


நேச குமார்(10:59:02am): நல்ல சுத்தமான வேலை


நேச குமார்(10:59:25am): ஆம், ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தது பொலவே


நேச குமார்(10:59:46am): முஸ்லீம் அமைப்பு ஒன்றும் நல்ல பணி செய்துள்ளது


பிகேசிவகுமார்(11:00:19am): எங்கே நாகப்பட்டினம் பகுதியிலா?


நேச குமார்(11:00:45am): முதலில் கொஞ்சம் மனவருத்தம் இருந்திருக்கிறது, கிறிஸ்துவ அமைப்புகள் பாரபட்சமாக செயல்பட்டன என்று. ஆனால் அவர்கள் நிலையையும் பார்க்க வேண்டும். ஏராளமான டூரிஸ்டுகள் வேளாங்கன்னியில் உ


நேச குமார்(11:01:10am): நாகை மற்றுமல்லாது குளச்சல் பகுதியிலும்


பிகேசிவகுமார்(11:01:32am): உங்களுக்குக் கிடைத்த தகவல்களை ஒரு மடலாகக் குழுமங்களில் போடுங்களேன்


ஐயப்பன்(11:06:45am): நேசகுமார் இருக்கீங்களா


ஐயப்பன்(11:07:11am): இங்க சொன்னதை நீங்க மரத்தடில கட்டுரையா எழுதலாமே



'வாசன்' வருகை [Tue Jan 11 11:10:47 GMT+0800 2005]

நேச குமார்(11:11:06am): எழுதுகிறேன் ஐயப்பன், முதலில் எல்லா விவரங்களையும் கேட்டு, என்னளவில் எல்லாவற்றையும் ஒன்றுக்கு இரண்டுமுறை உறுதிப்படுத்திக் கொண்டு பின் எழுதுகிறேன்


இர.அருள்குமரன்(12:49:16am): இங்கே இந்திய நேரம் இரண்டு மணியளவில் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. நண்பர்கள் அந்நேரம் வரவும்


நேச குமார்(9:44:17pm): கண் பிரச்சினை பற்றித் தெரிவித்த நன்பரிடம் மீண்டும் இன்று பேசினேன். அது கிருமிகளால் தான் நிகழ்ந்துள்ளது என்றும், சரியாகிவிடும் என்றும் சோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர் என்று கூறினார். அநேகமாக எதாவது ஐ இன்·பக்ஷன் போலிருக்கிறது. கண் பார்வை மங்கலாகத் தெரியவே பார்வையே போய்விட்டது என்று சிறுவர்கள் தெரிவித்திருக்கின்றனர் போலிருக்கிறது.

இதற்கிடையில், அவர்கள் எல்லோம் கறுப்புக் கலரில் மண் அடித்தது என்று தெரிவித்ததையும், இன்று செய்தியில் டன் கணக்கில் டைடானியம், இல்லிமேட் போன்ற மினரல்கள் நாகப்பட்டினம் பகுதிகளில் சுனாமியால் கடலின் அடியாழத்திலிருந்து கொண்டு வந்து போடப்பட்டுள்ளது என்பதையும் கண்டு, நியூக்ளியர் மெடிசின் தெரிந்த நன்பர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டேன்.

அவர் அதற்கு, டைட்டானியம் கண்ணுக்குள் போயிருந்தாலும் பிரச்சினை இல்லை. மண் உறுத்தலால் தான் பாதிப்பு ஏற்படுமே தவிர, மற்றபடி ஆபத்து எதுவுமே இல்லை என்று தெரிவித்தார்.




சுனாமி அரங்க சந்திப்பு நேரப் பட்டியல்

(இந்திய நேரப்படி)

திங்கள்காலை6:00மதியம்3:30
செவ்வாய்காலை8:00மாலை5:30
புதன்காலை10:00மாலை7:30
வியாழன்காலை12:00இரவு9:30
வெள்ளிமதியம்2:00இரவு11:30
சனிமாலை4:00 அதிகாலை1:30
ஞாயிறுமாலை6:00 அதிகாலை3:30

நேரப் பட்டியல் பலரையும் ஒரே நேரத்தில் திரட்டுவதற்காக மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மற்றபடி அரங்கம் எல்லா நேரங்களிலும் திறந்தே இருக்கும். எனக்கு தோன்றியபடி நேரத்தை குறித்திருக்கிறேன், மாற்றம் வேண்டுவோர் எனக்கு மடலிடவும். அல்லது பின்னூட்டம் கொடுக்கவும்