உள்ளத்து ஓசை

Monday, November 22, 2004

புதிய தமிழ்மணம்

உற்சாகத்துடன் சாதிக்கும் நபர்களை பார்க்கும் போதெல்லாம் ஒரு உத்வேகம் பிறக்கும் எனக்கு. வலைப்பதிவுகளை தொகுத்து காண்பிக்கும் இணையச்செயலி ஒன்றினை செய்திட வெகுநாளாக ஆவல் கொண்டிருந்தேன். சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள நீண்ட இடைவெளியை நான் மெல்ல ஊர்ந்து கடக்கும் முன்னே காசி தமிழ் மணம் வீசத் தொடங்கினார். நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக இனிதே வளர்ந்துவரும் இந்த தளத்துக்கு நான் ஏதாகிலும் செய்ய முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன்.


நேரமின்மையாலும் என்னை விட வேகமான/திறமையான வரைகலையாளர்கள் இருப்பதாலும் என்னுடைய ஆர்வம் என்னை முழுநேர Developer ஆக இருக்க தூண்டுவதாலும் இப்போதெல்லாம் நான் கணினி வரைகலைப் பணிகளை ஒதுக்கிவிடுகிறேன்.


காசி ஏற்கனவே திறம்பட தளத்தை இயக்கிவருவதால் வேறு வழியின்றி என்னுடைய பங்களிப்பாக சற்று மேம்படுத்தப்பட்ட கீழ்கண்ட வடிவமைப்பை அமைத்திருக்கிறேன். உங்களின் கருத்துக்களைக் கேட்டு வேண்டிய மாற்றங்கள் செய்தபின் காசியிடம் ஒப்படைத்து விடுவேன். எனவே படம் பார்த்து கருத்து(கதை அல்ல!) சொல்லுங்கள் :)




5 மறுமொழிகள்:

  • பொது விடயங்களில் இப்படி ஒருவருக்கொருவர் உதவ முன்வருவது, கருத்துக்களை தெரிவிப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம்.

    பி.கு தமிழ்உலகத்திற்கு செய்ததுபோல் மற்றைய மடலாடற்குழுக்களுக்கும் இணையமூலம் ஒரு தளம் அமைப்பது எப்போது???

    மறுமொழி: suratha, நேரம்: 10:13 PM  

  • வாருங்கள் சுரதா,
    எந்த தமிழ் தளத்தையும் (யுனிகோட், திஸ்கி, தாப்) எளிதில் படிக்க உதவும் இணையச் செயலி உருவாக்கி வருகிறேன்(வழக்கம் போல கிடைக்கும் நேரத்தில், ஆமை வேகத்தில்!)

    உங்கள் அனைவரையும் பார்த்துத்தான் ஊக்கம் பெறுகிறேன்

    மறுமொழி: Arul, நேரம்: 10:20 PM  

  • அன்பு அருள்,
    தனி மடலில் சில எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறேன்.
    -காசி

    மறுமொழி: காசி (Kasi), நேரம்: 10:45 PM  

  • தங்களது

    டெம்பிளேட்
    எனக்குப் பிடித்திருக்கிறது
    அதை எனது பிளாக்கில்
    பயன்படுத்த அனுமதி தருவீர்களா?

    அதை எவ்வாறு செய்வது எனற
    குறிப்பையும் தருவீர்களா?

    இண்டி ராம்

    மறுமொழி: ram, நேரம்: 4:33 AM  

  • http://www.simplebits.com/work/blogger/ மேற்கண்ட தளத்திலுள்ள டெம்ப்ளேட்டின் தமிழ்ப்படுத்திய வடிவம் தான் நான் உபயோகிப்பது. உங்களுக்கு மடலில் அனுப்பிவைக்கிறேன். உங்களுடைய வலைப்பதிவின் டெம்ப்ளேட் பகுதியில் ஒத்தி ஒட்டினால் போதும். பின்னர் வேண்டிய மாற்றங்களை செய்துகொள்ளுங்கள்
    அன்புடன்,
    இர.அருள் குமரன்

    மறுமொழி: Arul, நேரம்: 11:12 AM  

Post a Comment

<< முதல் பக்கம்